1) இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, நாம் மனம் மாறிடவும், உயிர் துடிப்புள்ள விசுவாசமுடன் வாழவும் செபிப்போமாக.
The Resurrection
Matthew 28:1-15
Mark 16:1-13
Luke 24:1-12
John 20:1-18
2) இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நாம் இறைவனில் நம்பிக்கை கொண்டு விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்டு செபிப்போமாக.
The Ascension
Mark 16:19-20
Luke 24:50-53
Acts 1:9-11
3) தூய ஆவியின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் தூய ஆவியின் கொடைகளைப் பெறச் செபிப்போமாக
The Descent of the Holy Spirit
Acts 2:1-41
4) தேவ அன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்கு பெறச் செபிப்போமாக.
The Assumption
Psalm 15 (16):10
1 Thessalonians 4:14-16
Apocalypse 2:11
5) தேவ அன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பெற்றதைத் தியானித்து, நாம் அன்னை மரியாவின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ளச் செபிப்போமாக
Sign of the Cross
தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, அமென்.
Apostles Creed
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.
Our Father
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.
Hail Mary
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.