Prayers
Sacred Heart
கிறிஸ்துவின் ஆத்துமமே — என்னை அர்ச்சித்தருளும்.
கிறிஸ்துவின் சரீரமே — என்னை இரட்சித்தருளும்.
கிறிஸ்துவின் இரத்தமே — எனக்குத் திருப்தியளித்தருளும்.
கிறிஸ்துவின் விலாவிலிருந்து ஒடி வரும் தண்ணீரே — என்னைக் கழுவியருளும்.
கிறிஸ்துவின் திருப்பாடுகளே — எனக்குத் தேற்றரவு அளித்தருளும்.
ஓ நல்ல இயேசுவே! — நான் கேட்பதை தந்தருளும்.
உமது திருக் காயங்களுக்குள்ளே — என்னை மறைத்தருளும்.
துக்ஷ்ட எதிரியிடமிருந்து — என்னை காத்தருளும்.
என் மரண வேளையில் — என்னை அழைத்தருளும்.
நித்திய காலமும் உம் புனிதர்களோடு உம்மை துதிக்க — நான் உம்மிடம் வரச் செய்தருளும்.
ஆமென்.
சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். - (3)
பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.
பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.
1 - ம் பத்து மணி: பிற மதத்தினர் முதலிய வேத விரோதிகளால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். (10)
பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.
பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.
2 - ம் பத்து மணி: பொல்லாத கிறிஸ்தவர்களால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். (10)
பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.
பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.
3 - ம் பத்து மணி: நாம் தாமே அவருக்குண்டாக்கும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். (10)
பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.
பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.
4 - ம் பத்து மணி: சகல மனிதராலும் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகவும், பரிசுத்த தேவமாதா, சகல அர்ச்சியஷ்டர்களுடைய சிநேகப் பற்றுதலோடு நாமும்
நம்முடைய இருதயத்தை ஒப்புக் கொடுப்போம்.
சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். (10)
பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.
பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.
5 - ம் பத்து மணி: இயேசுவின் திரு இருதயமே! நாங்களும் மற்றவர்களும் உம்மை அறிந்து அதிகமாய் சிநேகிக்கும்படிக்கும் அனுகிரகம் செய்தருளும்.
சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். (10)
பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.
பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.
ஐம்பது மணி முடிந்த பின்
இயேசுவின் திரு இருதயமே! — எங்கள் பேரில் இரக்கமாயிரும்
ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச் மரியாயின் மாசற்ற இருதயமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திரு இருதயத்தின் ஆண்டவளே — எங்களுக்காக வேண்டிகொள்ளும்
இயேசு நாதருடைய திரு இருதயமானது எங்கும் சிநேகிக்கப்படுவதாக என் இயேசுவே — என் பேரில் இரக்கமாயிரும்
திரு இருதயத்தின் சிநேகிதராகிய புனித சூசையப்பரே — எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
திரு இருதய பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் — கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் — கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
தமத்திருத்துவமாகியிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சிஷ்ட மரியாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மிடத்தில் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே — எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
சகல அர்ச்சிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே — எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
முதல்வர் - இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே
துணைவர் - எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.
செபிப்போமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும்.உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்
இயேசுவின் திரு இருதயத்துக்கு
குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற செபம்
இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! /கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும் / சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து / நன்றியறிந்த பட்சத்தோடு /உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். / நேசமுள்ள இயேசுவே! /எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். / தேவரீர் எங்களை ஆசீர்வதித்து /இப்பொழுதும் எப்பொழுதும் / உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். / தவறி எங்களில் யாராவது / உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் / அவர் குற்றத்துக்கு நாங்களே நிந்தை பரிகாரம் செய்கிறோம். / உமது திரு இருதயத்தை பார்த்து / எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு / அவனுக்கு கிருபை செய்தருளும். / இதுவுமன்றி / உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். / பலவீனர்களுக்கு பலமும் , / விருத்தாப்பியருக்கு ஊன்றுகோலும் / விதவைகளுக்கு ஆதரவமும் , / அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமாயிருக்க தையைபுரியும். / ஒவ்வொரு வீட்டிலும் / நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் / தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக. இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! / சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே! / இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். / அவர்களை ஆசீர்வதித்து / அவர்களுடைய இதயத்தில் / விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்தருளும். / வாழும் காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் / மரண நேரத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி / உம்மை மன்றாடுகிறோம். / திவ்ய இயேசுவே! / முறை முறையாய் உமது அன்பில் வாழ்ந்து மரித்து / நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் / உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும்.
ஆமென்.
Prayers
- Rosary
- Infant Jesus
- Infant Jesus
- Sacred Heart
- St. Anthony
- Velankanni Matha
- வே ளாஙகணண மாதாவகக நவநாள ஜெ பம
- குடும்பங்களுக்கான ஜெபம்
- திருப்பலி
- The Joyful Mysteries
- ஒளி மறையுண்மைகள்
- துயர மறையுண்மைகள்
- மகிமை மறையுண்மைகள்
- விசுவாசப் பிரமாணம்
- இயேசு கற்பித்த செபம்
- மங்கள வார்த்தை செபம்
- திரித்துவப் புகழ்
- பாத்திமா ஜெபம்
- கிருபைதாயாபரத்துச் செபம்
- காணிக்கை செபம்