Prayers

1)கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்ததைத் தியானித்து, நாம் தாழ்ச்சியுடன் வாழ வரம் கேட்போமாக.
2) தேவ அன்னை எலிசபெத்தை சத்தித்ததைத் தியானித்து, நாம் பிறரன்பில் வளரச் செபிப்போமாக.
3) இயேசு பிறந்ததைத் தியானித்து, நாம் எளிமையாய் வாழச் செபிப்போமாக.
4) இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததைத் தியானித்து, நாம் இறை திருவுளத்திற்குப் பணிந்து நடக்கும் வரம் கேட்போமாக.
5) காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததைத் தியானித்து, நாம் இயேசுவை என்றும் தாகத்தோடு தேடும் வரம் கேட்டு செபிப்போமாக.